Translate

Showing posts with label அன்னமே! எங்கள் தங்கமே!!. Show all posts
Showing posts with label அன்னமே! எங்கள் தங்கமே!!. Show all posts

Thursday, April 19, 2018

அன்னமே! எங்கள் தங்கமே!!






கண்ணே! மணியே!!
வளர்த்தோம் உனையே.
கைத்தளம் பற்ற
கொடுத்தோம் உனையே. 8

குணவதியே!
குலவிளக்கே!!
குன்றா நலனுடன்
குறைவின்றி நீ வாழ்க. 15

திருமண உறவாலே
திருமாங்கல்யம் தரித்தவளே,
திளைக்கட்டும் உறவுகள்
திகட்டாத நிலையாக. 23

காலமெல்லாம் கனிந்துருக
காதற்கிளிகளாய்
கலந்து நீங்கள் உறவாடி
கவிதை நிலையாய் வாழுங்கள். 32

அள்ளி நீ முடித்திருந்து
அன்பாக அவனுடனே
அனுதினமும் நீயிருந்தால்
அழகாகுமே வாழ்க்கையது. 41

அவனும் தான் அனுசரிப்பான்
அன்புடனே அவனிருப்பான்
அத்தனையும் அவனளிப்பான்
அலங்கரிப்பான் உனையவனே. 50

நிறைகளெல்லாம் குடை பிடிக்க,
குறைகளெல்லாம் கலந்து மறைய,
நிறைவான வாழ்வாக
இருவரும் சமமாய் வாழ்ந்திருக்க,. 61

அரவணைத்து செல் இதமாக,
அனைவரையும் சமமாக,
ஆட்கொண்டு இருவரும்
ஆட்சி செய்ய ஆசீர்வதித்தேன் பாசமாக. 72



ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏