Translate

Showing posts with label உங்களுக்கோர் செய்தி. Show all posts
Showing posts with label உங்களுக்கோர் செய்தி. Show all posts

Saturday, November 25, 2017

உங்களுக்கோர் செய்தி


தினமும் இதே உணவா?
பிடிக்கவில்லை,
வேண்டாம்,
சாப்பிட மாட்டோம்
என்று அடம் பிடித்தன
குட்டி எறும்புகள்,
பெரிய எறும்புகள்
சேகரித்து வந்த
கொசு சடலங்களை நுகர்ந்தபடி.

இருப்பிடத்திற்கு
கொண்டு செல்லலாமா?
வேண்டாமா?
என கூட்டமாய் நின்று
நீண்ட நேரம்
ஆலோசித்துக் கொண்டிருந்தன
எறும்புகள்,
கிடைத்த
ஒரு கொசுவை வைத்துக் கொண்டு.

எனக்கோ மிக்க மகிழ்ச்சி,
உங்களுக்கு சொல்ல
ஒரு செய்தி கிடைத்ததற்கு. 😜
வணக்கமுடன் 🙏
இனிய நாள் வாழ்த்துகள் நண்பர்களே. 🌹🌹

--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன் 🙏🙏