Translate

Showing posts with label திறவுகோல் உன்னிடமே. Show all posts
Showing posts with label திறவுகோல் உன்னிடமே. Show all posts

Monday, April 30, 2018

திறவுகோல் உன்னிடமே


இங்கில்லாத புதையல் வேறெங்குமில்லை.
திறவுகோல் மனமின்றி வேறெதுவுமில்லை.
தேடி நீ அலைந்தாலும் கிடைப்பதில்லை.
தேடாமல் தானாய் வருவதுமில்லை.
செயல்படுத்த அறிவின்றி வேறொன்றுமில்லை.
செம்மையின்றி போனால் வெற்றியடைவதில்லை. 19

ஆக்கத்தின் முயற்சி உன்னிடமின்றி வேறிடமில்லை
அறிவில் எங்கும் வெற்றிடமில்லை
அறிந்துக் கொண்டால் வேதனையில்லை.
அறிவின்றி தொலைப்பது வெறுமையின் எல்லை. 33

துனிந்தால் உனக்கு துக்கமதில்யில்லை.
நல்லுறவு என்றும் பங்கமிழைப்பதில்லை.
பகைமை என்றும் நன்மை பயப்பதில்லை
தயக்கமிருந்தால் அண்மையெதுவுமில்லை.
குறுகி கிடந்தால் நிம்மதியில்லை.
தேவையில்லா தலையிடல் தருமென்றும் தொல்லை. 52

நினைத்தால் வின்னும் தூரமொன்றுமில்லை.
இயற்கையின் படைப்பில் இல்லாததில்லை.
ஏற்று வெல்வாய் மூத்தோர் சொல்லை.
தேடலில் வெற்றி ஆனந்தத்தின் எல்லை.. 66
.



ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


பத்ரி நாராயணன்.A.M. 🙏