Translate

Showing posts with label ஆசைகள் விடுவதில்லை. Show all posts
Showing posts with label ஆசைகள் விடுவதில்லை. Show all posts

Wednesday, July 4, 2018

ஆசைகள் விடுவதில்லை,






ஆசைகள் விடுவதில்லை,
++++++++++++++++++++++++

கருப்புத் தங்கமேனு சொல்லிதான்
கொஞ்சுவாரடி.
இம்புட்டு நகையெல்லாம் அன்றைக்கேதடி.
காதுலே தொங்குமடி லோலாக்கு,
வகைவகையா மூக்குத்தி,
ஏதேதோ சிலது போட்டேன்.
அதுக்கே
அன்னைக்கு ஆட்டம் போட்டேன். 19

காதிலிருக்கும் தொங்கலை
சுண்டி விட்டு அழகு பார்ப்பார்.
மூக்குத்திய திருகியே
சீண்டிப் பார்ப்பார் 29

ஆசையாய் இருக்குதடி
பூட்டிக்கிட்டு நானும் திரிய.
அந்த ஆளுக்கு தெரிஞ்சாலே
மிதிச்சு போடும் கிளவினு பாக்காம. 41

அம்சமாய் இருக்குதடி
பேத்தி
உனக்கு போட்டாலே.
என் அழகை சொல்லுடி
அதுக்கு முன்னாலே.
கழுதைக்கு பட்டு குஞ்சமானு
கேட்டு புடாதே…
போடாத ஆசையால
மாட்டி பாத்தேன் உனக்கு முன்னலே. 62

மாமங்காரன் முன்னாடி
சொல்லி சிரிக்காதே.
உன் மருவாத கெட்டு புடும்
சொல்லி புட்டேன்டி.
எடக்கு முடக்கா சிரிக்கிறயே
என்னைப் பார்த்து.
வெக்கமா இருக்குதடி
உன் சிரிப்பப் பார்த்து
😋😍😎😜
🙏

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.