Translate

Saturday, January 23, 2010

மங்கள வாழ்த்து - 2

சென்ற 19 ம் தேதி சென்னையில் நடைப்பெற்ற எமது மகள் திருமண வரவேற்பில் வாசித்தளித்த வாழ்த்து மடல்.

இல்லற வாழ்விலே
இணைந்த உள்ளங்களுக்கு வாழ்த்து.

மணமகள்: மணமகன்:
நிரஞ்ஜனா ஆனந்தராஜ்


இரவும் பகலும்
வருவது போல,
மாற்றங்கள் உள்ள
வாழ்வை உணர்ந்து,
ஒருவருடன் மற்றவர்
ஒற்றுமையாய் இருந்து,
இணைந்த கைகள்
இணைந்தே இருக்க,
காலத்தையும் நேரத்தையும்
கருத்திலேக் கொண்டு,
ஈந்து வாழ்ந்தால்
இசையாய் அமையும்.

நட்பினால் தொடங்கிய
காதல் என்றும்,
காலம் முழுதும்
நட்புடன் இருக்க,
நவிலும் வார்த்தைகள்
இனிமையாய் அமைந்தால்,
நலம்பட வாழ்வும்
இன்பமாய் இருக்குமே.

ஆயக்கலைகள்
அறுபத்து நான்கு,
அதிலே ஒன்று
குடும்ப வாழ்வு.
வாழ்க்கை என்பது
பகட்டானது அல்ல,
குன்றிலிட்ட விளக்காய்
சிறப்பாய் ஒளிர,
சீராய்ந்து, கவிதையில்
மங்களங்கள் பொங்க,
மனமுவந்து வாழ்த்தினோம்
மகிழ்வுடன் வாழ்கவே!!!.....

இப்படிக்கு,
பாட்டனார்: மாணிக்கம் செட்டியார் .
அப்பா: பத்ரிநாராயணன்.
அம்மா: ராஜராஜேஸ்வரி.
தங்கை: சோபனா.



இடம்: சென்னை, பாரதி ராம் கல்யாண மண்டபம்.
தேதி : 19/01/2010


மங்கள வாழ்த்து

சென்ற 18 ம் பாண்டிசேரியில் எமது மூத்தமகள் ஸௌபாக்கியவதி. நிரஞ்சனாவுக்கும், சிரஞ்சீவி. ஆனந்த் அகஷ்ட்க்கும் நடைப்பெற்ற திருமண விழாவுக்கு வாசித்தளித்த வாழ்த்துமடல் இதோ:


இல்லறத்தில் இணையும்
மனங்களுக்கு மங்கள வாழ்த்து.
மணமகள்: மணமகன்:
நிரஞ்ஜனா ஆனந்தராஜ்

இருவரின் மனமும்
பறந்தே அலைந்தது.
இணையும் இன்று வரையும்
படபடத்தே பறந்தது.

காதலொன்றே
மனத்திலிருக்க,
காலமும் நேரமும்
மாறுபட்டிருக்க,

உறக்கமும் விழிப்பும்
ஒன்றாய் இருக்க,
மயக்கமாய் தானே
அதுவும் கழிந்தது.

இருவரின் இடமும்
வேறாய் இருக்க,
இணையும் முடிவிலோ
ஒன்றாய் இருக்க,

வேறுப்பட்ட மனங்களும்
மாற்றங்களை உணர்ந்து,
வேற்றுமைகளை மறந்து.
மனமார வாழ்த்தியது.

இணைந்த உள்ளங்கள்
இணையும் வாழ்விலே,
இவ்வையகம் புகழ
இன்று போல் என்றுமே,
இன்முகம் மலர,
இன்சொல் உதிர்த்து ,
இல்லறத்தில் கலந்து,
இருவருடன்
இருவராய் மேலும் உயர்ந்து,
இன்பமாய் வாழ
இறையை பணிந்து,
இயம்புகின்றோம் வாழ்த்துகளை.


இங்ஙணம்,
பாட்டனார்: மாணிக்கம் செட்டியார் .
அப்பா: பத்ரிநாராயணன்.
அம்மா: ராஜராஜேஸ்வரி.
தங்கை: சோபனா.

இடம்: பாண்டிசேரி, ஆனந்தா திருமண நிலையம்.
தேதி : 18/01/2010

Friday, January 15, 2010

இனிக்கட்டும் பொங்கல்.

செஞ்ஞாயிறு உதிக்க
செவ்வானம் ஒளிர,
செவ்விதழாய் மலர்ந்து
செந்தையும் பிறக்க,

செங்கரும்பு வளர்ந்து
இனிப்பைக் கொடுக்க,
செம்பால் பொங்கி,
பொங்கல் ஆகும்.

மங்கலங்கள் நடந்து
மகிழ்வுகள் ஆக,
நித்தமும் அதுவே
நிலைத்தே இருக்க,
இறைவனை தொழுது
இயன்றதை செய்வோம்.

இனிக்கட்டும் வாழ்வு

உயிரையும் காக்க
உண்டியும் நிறைய,
உண்ண உணவளிக்க
உழைக்கும் உழவருக்கும்,
உலகில் வாழும்
உற்றார் உறவினருக்கும்
உயிர்தேழுந்துள்ள
உயிரினங்களுக்கும்
உதவுகின்ற அனைத்துக்கும்,
உளமாற நன்றிகளை
உள்ளவரை நவில
உரைக்குமிந்த பொங்கல்
உய்யட்டும் சிறப்பாக.

உருவமாய் படைத்து
அருவமாய் இருக்கின்ற
ஆட்டுவிக்கின்ற இறைவனை
பாதம் தொழுது,
பணிந்தே வாழ்த்துகிறோம்,
இனிதாய் இருக்கட்டும் வாழ்வு
இனிய பொங்கலைப் போல.