Translate

Showing posts with label கேள்வி பதில். Show all posts
Showing posts with label கேள்வி பதில். Show all posts

Friday, December 8, 2017

கேள்வி பதில் – இன்றொரு தகவல்

கேள்வி:- எனது மாற்றுத்திறனாளர் தேசிய அடையாள அட்டை தொலைந்து விட்டது \ சேதமாகி விட்டது. அதற்கு பதிலாக புதிய அட்டை எங்கே, எப்படி பெறுவது?
பதில்:- ஒவ்வொரு வாரமும் மாவட்ட மாற்றுத்திறனாளர் நல அலுவலகத்தில், மருத்துவர் சான்று அளிப்பார்கள். அந்த நாளில் உங்கள்

1)   பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மூன்று,
2)   இருப்பிட சான்றுக்கான ரேசன் கார்டு,
3)   ஆதார் கார்டு, அசலுடன் நகல்கள்,
4)   இதற்கு முன் பெற்ற மாற்றுத்திறனாளர் தேசிய அடையாள அட்டையின் நகல் எடுத்து சென்று,
5)   மாவட்ட மாற்றுத்திறனாளர் நல அலுவலருக்கு விண்ணப்பம் அளித்து, புது மாற்றுத்திறனாளர் தேசிய அடையாள அட்டையைப் பெறலாம்.
என்றும் உங்கள்,
மாற்றுத்திறனாளர் நண்பன்,

A.M.பத்ரி நாராயணன்

Wednesday, August 12, 2015

கேள்வி பதில்



Dhavappudhalvan Badrinarayanan A M
     தமிழ்நாடு அரசாங்க சேவை ஆணைக்குழு  நடத்தவிருக்கும் குரூப் 1 தேர்வுகளை (TNPSC GROUP 1 EXAMS ), பகுதி பார்வை குறைபாடு  ( Visually impaired )  40% சதவீதத்திற்கு மேலுள்ளவர்கள் தேர்வு எழுத  அனுமதி உண்டாவென்பதை  தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பேராசிரியர். சகாதேவன் அவர்கள் அளித்த பதில்: 
     மத்திய அரசு வெளியிட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு முழுமையாக ஏற்று, அதனை அமுல்படுத்தும் வகையில் ஆணைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி 40% விழுக்காடு (சதவிகிதம்)   மாற்றுத்திறனுடைய அனைவரும் தமிழ்நாடு தேர்வு ஆணையத்தால் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் பங்குபெற தகுதியுடையவர்களாவர்.
எனினும் தமிழ்நாடு அரசு ஆணையம் வெளியிடுகின்ற விளம்பரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட ( Identified Post ) பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

#தமிழ்நாடு உதவிக்கரம்  மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் ''உதவிக்கரம்'' ஜூலை 2015 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.