Translate

Showing posts with label அகழ் விளக்கு சுபாஷ் சந்திர போஸ். Show all posts
Showing posts with label அகழ் விளக்கு சுபாஷ் சந்திர போஸ். Show all posts

Monday, April 16, 2018

அகழ் விளக்கு சுபாஷ் சந்திர போஸ்



அன்னியராய் உள்நுழைந்த
ஆங்கில பரங்கியரோ,
அச்சாரமிட்டு பிடித்தனரே.
அரசை முழுதாய் வளைத்தனரே.
அத்தனையும் தனதென்று
அகலமாய் கை விரிக்க,
அகப்பட்டு நாம் நசிந்தோம். 17
அடிமைத்தலையை அறுத்தெரிய
அகிம்சையெனும் அறவழியில்
அனுதினமும் போராட்டம்.
அடக்கிடக் கைக்கொண்டான்
ஆயுதத்தை கையிலெடுத்து. 27

அனுமானித்த வங்கச்சிங்கம்
அவர் பாணியில் பாடம் புகட்ட,
ஆதவனாய் புறப்பட்டான்,
அத்தனையும் துண்டிக்க
ஆயுதத்தை முத்தமிட்டார்
அலறி அவர்கள் மிரண்டோட.. 42


அதிகார மமதையில்
ஆங்கிலேயர் கொக்கரிக்க,
அவர்கள் நாட்டை விட்டு ஓடிடவே
அகால நேரத்திலும் திட்டமிட்டார்
அகிலமும் வியக்கும் வண்ணம்,
ஆயுதபடை அமைத்து விட்டார்.
அதிர்ந்ததடா சுபாஷ் என்னும் பெயரை கேட்டால்
அகண்டு விரிந்திருந்த ஆங்கிலேய அரசும். 68


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏