Translate

Showing posts with label இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள். Show all posts
Showing posts with label இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள். Show all posts

Thursday, January 18, 2018

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்

இணைந்த உள்ளங்கள்
இரண்டற கலந்த நாள்.
இறைவனின் ஆசீரால்
இன்பங்கள் யாவும்,
இடைவெளிகள் ஏதுமின்றி
இயங்குமிந்த வாழ்க்கையில்
இருப்புகள் கூடிச் செல்ல,
இறைவனை பணிந்து நாங்கள்
இன்றுமை வாழ்த்தினோம்
இனிய இத்திருமண நனனாளில்.

ஆசீர்வதிக்கும்,
அ்ப்பா, அம்மா

Thursday, December 7, 2017

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்

சங்கீதமாய்
சரசமாடட்டும்
சலங்கைக் கட்டி
சலசலக்கட்டும்.
சர்வேஸ்வரன் அருளுடனே
சர்வமும் நடக்கட்டுமது.
இயங்கட்டும்
இல்லற வாழ்க்கை
இனிதாய் மகிழ்வாய்,
என்றும் நலனாய்.
தாமதமாயினும்
நினைவில் கொண்டு
வாழ்த்துகிறோம் அன்புடன்.

எங்கள்
இனிய திருமணநாள் நல்லாசிகள் 

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்

இணைந்த உள்ளங்கள் நடக்கிறது
இன்று தோள்களைப் பற்றியபடி.
இன்னும் பற்பல ஆண்டுகள்
இறைவனின் அருள் கிடைத்தபடி,
நலமுடன் நாட்கள் நகர்ந்து
மகிழ்வுடன் நீங்கள் வாழ,
பிரார்த்தித்து நமஸ்கரித்தோம்
எங்களை ஆசீர்வதிக்க.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்

Wednesday, December 6, 2017

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்



கன்னி வாழ்க்கை
கரை மாறிய நாளிது.
மங்கையாய் கானம் பாடி விட்டு
மனைவியாய் கரம் பிடித்த நாளிது.
மங்கல இசை இடையே
மாங்கல்யம் தரித்த நாளிது.
மாதவம் ஈடேற
மாலையிட்ட நாளிது.
கட்டிய கோட்டைகளுடன்
கட்டியணைத்த நாளிது.
புரண்டோடும் நினைவுகளை
புரட்டிப் பார்க்கும் நாளிது.
இணையாய் என்றேன்றும்
இன்புற்று வாழ்ந்திருக்க,
இணையில்லா தலைவியாய்
இல்லத்தரசியாய் புகழடைய,
நலனும் மகிழ்வும் இறையருளால்
நீங்காது நிலைத்திருக்க,
உம் திருமணநாளில் நல்வாழ்த்துகள் கூறி
மகிழ்கிறேன் நான், எமதினிய தோழியே.

நட்புடன்
தவப்புதல்வன்,

A.M.பத்ரி நாராயணன்

Monday, September 4, 2017

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்

சர்வசதா காலமும்
சந்தோச உணர்வுடனே
சகல நிலை நலனுடனே
சர்வேஸ்வரன் அருளுடனே
சக்கரமாய் சுழலட்டும்
சகஜமாய் உம் வாழ்க்கை.

சந்தித்த நினைவுகள்
சலசலக்கும் புத்தூற்றாய்
சங்கீத நிலையாக
சரசமாடி செல்லட்டும்.
சாந்தங்கள் உம்முடனே
சக்தியாய் நிலவட்டும்.

பிரார்த்தித்தோம் உமக்காக,
பணிந்தோம் நீர் ஆசிர்வதிக்க.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
  அக்கா & பாவா.

Wednesday, February 24, 2016

இனிய திருமணநாள் நல்லாசிகள்

ஆண்டவரின் அருளெல்லாம்
உறுதுணையாய் உமக்கிருந்து,
உம் செல்லங்களின் வாழ்வை
செம்மையாய் நீரமைத்து,
மகிழ்வுடன் நாட்களை
நலமுடன் நீங்கள் கழிக்க,
நாமங்களில் ஒரு நாமம்
ஸ்ரீமத் நாராயணின் திருநாமம்
கொண்டவனைப் பிரார்த்தித்தேன்,
தம்பதியாய் குடும்பமுடன்
சுகமாய் நெடுநாள் வாழ்ந்திருக்க.

உங்களுக்கு
எங்கள் 
இனிய திருமணநாள் நல்லாசிகள்

Tuesday, May 19, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் - ஶ்ரீ.சரஸ்வதி, ஶ்ரீ.பட்டாபிராமன்

இருவரும் ஒருவராய்
எண்ணத்தில் சிறந்தவராய்
வாழ்க்கையின் குறிக்கோளை
வண்ணங்கள் பல கொடுத்து
வரைகிறீர் ஓவியமாய்
துவங்கிய இந்நாளில்.

ஆனந்தமாய் வாழ்ந்திட,
நலமாய் திகழ்ந்திட,
இறையருள் தொடர்ந்திட,
என்றுமையவன் சீராட்ட,
பரம்பொருளவன் பாதந்தனில் பணிந்தோம்.

வாழ்த்துக்களை பகிர்ந்து
மகிழ்வான நிலையில்
கரங்களைக் குவித்தோம்
உம்மாசிகளை பெறவே.


Wednesday, May 6, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்- N G V Sankar




N G V Sankar


ஆஹா.. அழகு
அற்புதம் 
ஆனந்தம்
அறிந்ததும் நெஞ்சம் 
ஆழ்ந்தது மகிழ்வில்.

இரண்டறக் கலந்த
இல்லற வாழ்க்கை,
இறைவனின் அருளால் 
இனிக்கட்டும் என்றும்.

இறைவனிடம் பணிந்தோம்
இன்புற்று நீவீர் வாழ,
குவித்தோம் கரங்களை
ஆசிகள் உம்மிடம் பெறவே.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் நண்பரே.

Friday, April 17, 2015

செப்ப வேண்டும் - இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்- A.M.பத்ரி நாராயணன் ( தவப்புதல்வன் ) & ஸ்ரீமதி.B.ராஜராஜேஸ்வரி

இன்று எங்கள் 34வது வருட திருமணநாள் நட்புகளே.

34 வருடங்களை கழித்து 35வது வருட குடும்ப வாழ்வில் நுழைந்திருக்கிறோம். நட்புகளில் பெரியவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் மற்ற நட்புகளின் வாழ்த்துகளையும் அன்புடன் எதிர்ப்பார்த்து.




மஞ்சத்தில்  இணையாக
மகிழ்வாக உருண்டு விட்டோம்.

மீட்டெடுக்க முடியாமல்
மிச்சமதை தவற விட்டோம்.

மார் தட்டும் நிலையாக
வாரிசுகளை வளர்த்து விட்டோம்.

இல்லறத்தில் நல்லறத்தை
வாழ்விலே முடித்து விட்டோம்.

சூதறியா மனத்துடனே
சுற்றமதை அணைத்துக் கொண்டோம்.

உடன்பிறவா நிலையிருந்தும்
உற்ற நட்புக்கு சிறப்பளித்தோம்.

இறுமார்க்க இயலாதே - நம்
செயலனைத்தும் சரியென்றே.

செப்ப வேண்டும் சுற்றமுடன் நட்புமே
குடும்பமுடன் சேர்ந்திணைந்து. 

#இவ்வாழ்த்து 2011ம் வருடமே எழுதப்பட்டது.
  ஏனோ வெளியிடாமல் விட்டு விட்டேன்.
 தாமததத்தை தவிர்த்து வெளியிட்டு விட்டேன் 

Wednesday, June 29, 2011

செப்ப வேண்டும் - இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்

இன்று எங்கள் 34வது வருட திருமணநாள் நட்புகளே.

34 வருடங்களை கழித்து 35வது வருட குடும்ப வாழ்வில் நுழைந்திருக்கிறோம். நட்புகளில் பெரியவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் மற்ற நட்புகளின் வாழ்த்துகளையும் அன்புடன் எதிர்ப்பார்த்து.



மஞ்சத்தில்  இணையாக
மகிழ்வாக உருண்டு விட்டோம்.

மீட்டெடுக்க முடியாமல்
மிச்சமதை தவற விட்டோம்.

மார் தட்டும் நிலையாக
வாரிசுகளை வளர்த்து விட்டோம்.

இல்லறத்தில் நல்லறத்தை
வாழ்விலே முடித்து விட்டோம்.

சூதறியா மனத்துடனே
சுற்றமதை அணைத்துக் கொண்டோம்.

உடன்பிறவா நிலையிருந்தும்
உற்ற நட்புக்கு சிறப்பளித்தோம்.

இறுமார்க்க இயலாதே - நம்
செயலனைத்தும் சரியென்றே.

செப்ப வேண்டும் சுற்றமுடன் நட்புமே
குடும்பமுடன் சேர்ந்திணைந்து. 

#இவ்வாழ்த்து 2011ம் வருடமே எழுதப்பட்டது.
  ஏனோ வெளியிடாமல் விட்டு விட்டேன்.
 தாமததத்தை தவிர்த்து வெளியிட்டு விட்டேன்