Translate

Showing posts with label கொஞ்சம் தானடி கொஞ்சு நீயடி. Show all posts
Showing posts with label கொஞ்சம் தானடி கொஞ்சு நீயடி. Show all posts

Friday, June 15, 2018

கொஞ்சம் தானடி கொஞ்சு நீயடி






கொஞ்சம் தானடி

ஏனிந்த கோபமடி?
எடுத்துச் சொன்னா தீருமடி.
தாங்காதடி, என் மனது
நீ முறைத்தால் துள்ளாதடி.
வாய் திறந்துச் சொல்லடி.
மௌனமாய் கொல்லாதடி. 16

ஏனென்று கேளடி
என் தாமதத்தை
செவிக் கொடுத்து கேளடி.
எரிமலையாய் கக்காதடி.
உன் விழியிரண்டால் எரிக்காதடி.
வில்லாய் வளைக்காதடி
புருவமதில் அம்பு ஏற்றாதடி. 33

ஒரு கண்ணை மூடடி,
ஒற்றைக்கண்ணைச் சிமிட்டடி.
புன்னகையில் நீ அழகடி.
பூத்திருக்கும் அழகுப் பதுமையடி. 44
.
நமக்குள் வருத்தம் வேண்டாமடி.
நமை மறந்து இருப்போமடி
நேரம் போகுதடி
நெருங்கி வந்து அமருடி.
மல்லிகைப்பூ பாரடி
மணக்கும் மணத்தை நுகரடி
மனம் தானாய் சிலிர்க்குமடி 63

✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M


🙏