Translate

Showing posts with label பேத்திகளுக்கு.... Show all posts
Showing posts with label பேத்திகளுக்கு.... Show all posts

Wednesday, October 11, 2017

பேரன், பேத்திகளுக்கு...


எட்டியெட்டி நெஞ்சில் உதைத்தீர்.
ஏறி எனை முதுகில் மிதித்தீர்.
கன்னங்குழிய நீங்கள் சிரித்தீர்.
ஓடி வந்து கட்டியணைத்தீர்.
அங்கமெங்கும் முத்தமிட்டு
வாரியுமை இறுக்கிக் கொண்டேன்.
கலகலா ஒலியோசை 
கபடமின்றி வழிந்தோட,
தொடர்ந்து நீங்கள் குதுகளிக்க, மேலும்
உங்களை தூண்டி விட்டேன்.
நம் உள்ளங்கள் மகிழ்ந்திருக்க,
நாட்களோ கரைந்தோட,
வளரும் உங்கள் பருவமுடன்
வெல்லமுடியா போட்டியிலும்
உற்சாகத்தில் நான் நனைந்தேன்,
முதுமையிலும் உங்களாலே.

-- 
பாசமுடன் 
தாத்தா
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.