Translate

Tuesday, August 18, 2015

அப்பப்பா !!!!!!



ஒரு பக்கம் விருந்து சமையல்
மறுபக்கம் டயட் கண்ட்ரோல்
அடுத்த பக்கம் நோய் மருந்து
நாவுகள் நீரூற,
கண்களுக்கு காட்சியாய்
செவிகளுக்கு செய்தியாய்
மனத்திற்கோர் எண்ணமாக
ஓடுகிறது ஊடகத்தில்.

நண்டுக்கறி எனதென்பார்.
நாவூறும் சுவை என்பார்.
தாளிக்கும் பக்குவத்தில்
*தள்ளி செல்ல தூண்டுமென்பார்.

சைவப்பொருட்கள் *கூட்டாகும்
விதவிதமாய் உருவாகும்.
ஆசையால் விழி விரிய
அள்ளித் திணிக்க தோணுமடா.

அவர்
மணம் நுகர மூச்சிழுத்தால்
திரையொளி தாண்டியது
இங்கும் வந்து மூக்கடைக்கும்.

தூக்கமுடியா உடலுடனே
ஏற்றுக்கொள்ள மனமில்லா
ஆயாச பெருமூச்சு
மருத்துவர் இட்ட ஆணையாலே
பல நூறு மக்களிடத்தில்.

கண்ட பொருளனைத்தையும்   
வயிற்றில் போட்டு நிரப்பி விட்டு
வீட்டிலே பொருலெடுக்க வளையாமல்

‘’ஜிம்’’முக்கு செல்லுதடா செலவழித்து 
உருவுக்கு அழகென
உடலுக்கு உரமென – வீணாக
இங்கொரு பெருங்கூட்டம்.

காசு பண சுணக்கத்தால்
கவலைகள் கவ்விக்கொள்ள
கனவுகளாய் மாறி போகும்
கண்ட கோடி மக்களிடத்தில்.

அஞ்சறை(ரை) பெட்டியில்
அத்தனையும்
அரைக்குறையாய் பல்லிளிக்க
சராசரி பெண்ணிவள்
கையிலிருக்கும் பொருள் வைத்து
கச்சிதமாய் முடித்திடுவாள்
குடும்பம் சுவைத்து மகிழ்ந்திடவே.

நெய், முந்திரி இதுபோல
பல பொருள் இல்லாது,
மணமில்லா கலவையாக
சுவை தரும் புதிதாக.
இல்லா பொருளாலே இவள் உருக.
புதிய பண்டத்தில் மகிழ்ந்திருக்கும்      
 அவள் குடும்பம்



No comments: