Translate

Wednesday, November 1, 2017

புது பாடம் - 3



ஓங்கி வளர்கிறது
ஓயாமல் வளர்கிறது
கிளை - வேர்

அவர் உந்துதலால் நீ
அவை உந்துதலுக்கு நான்
கலாம் - கலம்

வடிக்க நீ
வடிக்கட்ட நான்
சிலை\சிற்பம் - சிகை

உயிர் கொடுக்க நீ
உயிர் வளர நான்
தந்தை - தாய்

வெளியில் நீ
மறைவில் நான்
போட்டி - பொறாமை

-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Chelliah புதிய வானம்..
புதிய பூமி..
இங்கே

பொன் மழை
பெய்கிறது....

நீருக்கு வேரேங்க
நேருக்கு நேர்
வாழ்கிறதே..
கிளி - ஜோசியம்

கலாமிட்ட குரல்
காலைப்பொழுதில்களில் கனவு..
சறுகும் - காற்றும்..
( காலம்,களம் )

பயிர்வளர்க்கநான். 
பறித்துப்போக நீ
மாநிலம் - மத்தியம்.

வெளி மூச்சில் நீ..
உள் மூச்சில் நான்..
உடலும் - உயிரும்..

பாலாகவே நீ...
பழமாக நான்..
உறக்கம் - எழுச்சி...

தேனாக நீ...
தித்திப்பாய் நான்..
நட்பு - நட்பு..

நம்பிரான்
இரா.செல்லையா..


Reply
1
28 mins
Remove

இக்கவிஞரின் கருத்திற்கான படத்தை இங்கு பதிவிட முடியவில்லை. -தவப்புதல்வன்



Dhavappudhalvan Badrinarayanan A M Chelliah சிந்திக்க திறனின்றி
தவித்து நான் போய் விட்டேன்.
உம் கருத்திடும் கவியழகில்

மூழ்கி நான் மயங்கி விட்டேன்.
சொல்லுக்கு வழியின்றி
நாணத்தை மொழி பெயர்த்தேன்.
கைத்தூக்கி எனை விடுத்து
மெய்யுலகை உணர செய்தீர்.


இதிலும் இக்கவிஞரின் கருத்திற்கான படத்தை இங்கு பதிவிட முடியவில்லை. -தவப்புதல்வன்
😊

No comments: