Translate

Monday, November 13, 2017

புது பாடம் - 11 - இரு பொருள் கவிதைகள்




செல்லாத நோட்டு
செல்லும் நாடு
பணம் - பயணம்

நமக்குள் இது
நட்புகளிடம் அது
அணைப்பு - பிணைப்பு

சோளக்காட்டில் அது
சோலையில் இது
மயில் - குயில்

உள்ளுக்குள் இருப்பது அது
செயலாய் காட்டுவது இது
குரோதம் - துரோகம்

ஈரத்தில் வளர்வது அது
ஈரமின்றி வதைப்பது இது
பாசி - பசி


--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: