Translate

Thursday, September 12, 2013

உயிரோடு ஆசிரிய சேவை, உயிரற்ற நிலையில்......



உயிர் காத்த மருத்துவமனைக்கு உடல் தானம் செய்த தம்பதி

கடந்த 20 ஆண்டுக்கு முன், தற்கொலைக்கு முயன்றபோது, உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனைக்கு, தங்களது உடல்களை தானமாக வழங்க உறுதிமொழி கடிதம் கொடுத்துள்ளனர், சிவகங்கை தம்பதி.

சிவகங்கை சி.பி., காலனியைச் சேர்ந்த, கார் டிரைவர், சந்திரமவுலீஸ்வரன், 47. மனைவி மீனாம்பாள், 42. மேலப்பூங்குடி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இருவரும்,நேற்று, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாந்தக்குமாரை சந்தித்து, தங்களது உடல்களை, மருத்துவக்கல்லூரிக்கு தானம் அளிப்பதற்கான உறுதி மொழிக் கடிதத்தை வழங்கினர்.

தம்பதி கூறியதாவது:

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள், 1992 ல், திருமணம் செய்தோம். இரு தரப்பிலும் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல், தற்கொலைக்கு முயன்றோம். எங்களது உயிரை, அரசு மருத்துவமனை டாக்டர்கள்தான் காப்பாற்றினர்.

இதற்கு நன்றிக் கடனாகவும், மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையிலும், இருவரின் உடல்களை தானம் செய்ய முயன்றபோது, கடந்த 2 ஆண்டுக்கு முன், பிள்ளைகள் தடுத்தனர். தற்போது, பி.டெக்., படிக்கும் எனது மகன், ""எனது உடலை தானம் செய்யப் போகிறேன், நீங்களும் தானம் செய்யுங்கள்,'' என்றான். இதன்படி, உறுதி மொழிக் கடிதத்தை வழங்கினோம். இவ்வாறு கூறினார்.

கல்லலைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி, ஓய்வு பெற்ற அரசு டாக்டர் காந்தி, 73; நேற்று, உடலை தானம் செய்வதற்கான கடிதம் கொடுத்தார். அவர் கூறுகையில், ""உயிரோடு, மருத்துவ சேவை புரிந்தேன். உயிரற்ற நிலையில், மாணவர்களுக்கு எனது உடல் சேவை புரிய வேண்டும் என்பதற்காக உடல் தானம் செய்கிறேன்,'' என்றார்.

No comments: