Translate

Thursday, September 19, 2013

16+1 கூடிய விரைவில்....

எப்பொழுதும்  சுமையுடனே ஓயாமல் ஓடும் லாரி.  தளராமல்  சுமையேற்றும் லோடுமேன். கடவுள் கொடுக்கிறாரென, கவலையின்றி செயல்படுகிறார்கள்.  ஆலம் விழுதுகளாய் படர்கிறது. பிரிட்டன் லாங்காஷயர் அருகே மோர்கேம்ப் பகுதியை சேர்ந்த நோயல் 41. அவரது மனைவி சூ ரேட்ஃபோர்ட் 38. சொந்தமாக பேக்கரி வைத்துள்ளார்.




திருமணமான 23 மூன்று ஆண்டுகளில் 16 குழந்தைகலுக்கு பெற்றோரான இவர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், குடும்பத்தின் 17வது புது நபராக, ஒரு வாரிசு பிறக்கப்போகிறது.  16வது குழந்தைக்கும் பிறக்க இருக்கின்ற 17ம் வாரிசுக்கும் 11 மாத இடைவெளி தாங்க. இந்த தம்பதியர் சராசரியாக 17 மாத இடைவெளியில் குழந்தைகளைப் பெற்றேடுத்துள்ளனர். பிரிட்டனில் இவர்கள் குடும்பம் தான் மகா பெரிய குடும்பமாக கருத்தப்படுகிறது.

இவர்கள் குடும்பத்தைப்பற்றி, 2011லேயே '15 குழந்தைகளும் அதற்கு மேலும் ' என்ற தலைப்பில் ஒரு குறும்படம் எடுக்கப்பட்டது. தனது குடும்பத்திற்காக 9 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வெளியே சென்று வர, மினி பஸ் ஒன்றையும் வைத்துள்ளனர்.


### 16 பெற்றும் அடங்காமல், பிரிட்டனை கலக்கும் இத்தம்பதிகள்,  "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க " என்ற தமிழ்  பழமொழியை கேட்டு, தவறாக புரிந்து கொண்டு விட்டார்களோ? .




No comments: