Translate

Thursday, September 12, 2013

குட்டி "ரத்தக் காட்டேறி "



கொசுக்களின் மூலம் பரப்பப்படும் மலேரியா நோயால் 2010ம் ஆண்டு கணக்குப்படி, உலகில் ஆண்டு தோறும் சுமார்  8 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகின்றனர். இதில் 90% சதவீதம் பேர் ஆப்ரிக்காவில் பலியாகின்றனர்.   5  உட்பட்ட குசந்தைகளையும், கர்பனிப் பெண்களையும் எளிதாக இது தாக்குகிறது. மலேரியா நோய் முற்றிலும் தடுக்கவும் குணப்படுத்தவும் கூடியது.

'அனாபெல்ஸ்' என்ற பெண் கொசுக்களில் தான்  உலக ஒழிப்பு தினம் மலேரியாவைப் பரப்பும் ஒட்டுண்ணி இருப்பதை, 1897ம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த டாக்டர் ரொனால்டு ரோஸ் என்பவர் கண்டு பிடித்தார். மலேரியாவைப்  பற்றிய ஆராய்ச்சியில் 1882 முதல் 1899 வரை 18 ஆண்டுகள் ஈடுப்பட்டார்.
இவர் 1902ம் ஆண்டுமருத்துவத்திற்கான  நோபல் பரிசு பெற்றார்.  பிரிட்டன் சார்பில் முதல் நோபல் பரிசுப் பெற்ற பெருமைக்கும் உரியவர். இவர் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, ஆகஸ்ட் 20ம் தேதி, மலேரியாவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதை தடுப்பதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ' உலக கொசு ஒழிப்பு தினம்' கொண்டாடப்படுகிறது. 

ரொனால்டு ரோஸ் 1857ல் உத்தரகண்ட் அல்மேரா மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு ஆங்கிலேய ரானுவ அதிகாரி. லண்டனில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு இந்தியாவிலேயே ஆராய்ச்சிகள் செய்தார்.


# ஐயோ... அதையேன் கேட்கிறீர்கள்? ஆகஸ்ட் 20ம் தேதியே போடவேண்டிய பதிவு இது. முதலில் வீட்டில் கொசுவை ஒழித்து விட்டு, மகிழ்வாய் பதிவிட பார்த்தோம். ஒழிக்கவும், சமாளிக்கவும்  முடியாமல், முடிவெடுத்தேன் பதிவை வெளியிட்டு விடுவதென? நீங்களாவது முயற்சி செய்து பாருங்கள். வேறென்ன, கொசுவை ஒழிப்பதுதாங்க.

No comments: