Translate

Monday, September 9, 2013

அடாவடி பெண் வக்கீல்.



மதுரையை சேர்ந்த பெண் வக்கீல், சென்னையிலிருந்து புறப்படும் விரைவு புகைவண்டியில், முன்பதிவில்லா பயண சீட்டுடன், முன்பதிவு பெட்டியில் ஏறி, பதிவு செய்திருந்த மற்றொரு பயணியின் முன்பதிவு இருக்கையில் அமர்ந்துக் கொண்டு, எழ மறுத்ததுடன்,  பரிசோதகரிடம் பேசிக்கொள்கிறேன் என்றவரிடம், பரிசோதகர் கூறியும் தான் வக்கீல் என்றும், என்னால் இடத்தை விட்டு  எழ முடியாது  என்றதுடன், பரிசோதகரையும், சக பயணிகளையும் சகட்டுமேனிக்கு வசைமாரி பொழிந்தார், செங்கல்பட்டு, விழுப்புரம் ஸ்டேசன்களில் போலீசார் கூறியும் இறங்கவில்லையாம்.  (பாவம், பயத்தினால் தாஜா செய்தார்கள் போலிருக்கிறது.) , பிறகு திருச்சி ஸ்டேசனில் ரயில்வே பெண் போலீசார் வந்து வலுக்கட்டாயமாக இறக்கினார்ளாம். அப்பொழுது புகைவண்டியிலும், பிளாட்பாரத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கைத்தட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள். அந்த போலீசாரையும் விட்டு வைக்கவில்லை வாசுவு சொற்களால் பொழிந்திருக்கிறார்.

பிறகு அடுத்து வந்த புகைவண்டியில் பத்திரமாக ஏற்றி அனுப்பினார்களாம்.

# என்ன அவ்வளவு பயமா வக்கீல்களிடம்.

No comments: